Monday, 29 August 2016

எத்தனை மொழிகள் ? எத்தனை எழுத்துக்கள் ?

எத்தனை மொழிகள் ? எத்தனை எழுத்துக்கள் ?  சா. கந்தசாமி 11-08-2015 தினமணி தருமபுரி பதிப்பில் எழுதிய கட்டுரை அப்படியே தரப்படுகிறது .
" இந்தியாவில் மூன்று வயதில் மழலையர் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் முதல் பிரச்னை மொழி.  இரண்டாவது பிரச்னை எழுத்து.  தங்களது தாய் மொழி அல்லாத ஆங்கில மொழியில் பேச, எழுத அவர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது.  பெற்றோர்கள், உறவினர்கள், சுற்றத்தார்களிடம் தாய்மொழியில் பேசியும், கேட்டும் வந்தவர்கள், ஆங்கில மொழியை புரிந்து கொள்ளவாவும், பேசவும் தடுமாறுகிறார்கள்.
மழலையர் பள்ளிகளில் குறைந்த நேரமே மழலையர் இருப்பதால், அது மொழியை கற்கப் போதுமானதாக இல்லை.  எனவே, பெற்றோர்கள் மழலைகளிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும்.  நண்பர்களும், உறவினர்களும் ஆங்கிலத்தில் உரையாட  வேண்டும்.  குழந்தையை ஆங்கிலத்தில் பேச வீட்டில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்,. அப்பொழுதுதான் அந்த மொழியில் நன்கு பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்று மழலையர் பள்ளி ஆசிரியர்கள் அறிவுரை கூறுகிறார்கள் .
மேலும் ஆங்கில மொழியை திருத்தமாக எழுதவும் மழலையர் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.  இது ஆங்கில மொழி படிப்பே அறிவு என்று நம்புவதால் சொல்லப்படுவதாகும். ஆனால் எந்த மொழியிலும் அறிவு கிடையாது.  மனித அறிவு மொழி வழியாக சொல்லப்படுகிறது.
ஆங்கில மொழி அறுநூறு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு அறுபது நாடுகளில் ஆட்சி மொழியாகவோ, இணைப்பு மொழியாகவோ இருக்கிறது.  127 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் ஜனநாயக நாடான இந்தியாவில் அது இணைப்பு மொழி.  ஆனால் உண்மையான ஆட்சி மொழி அது தான் .
ஏனெனில் , உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், பல்கலைக்கழகங்களில் படிப்பு, ஆராய்ச்சி மொழியாக ஆங்கிலமே இருந்து வருகிறது.  இந்தியாவிலும், உலகத்தில் பல நாடுகளுக்கும் உயர் பதவிகளுக்கு செல்ல விரும்புகின்றவர்களும் பண வசதி கொண்டவர்கள் படிக்கும் மொழியாக ஆங்கிலம் இருந் வருகிறது.
சுதந்திர போராட்டக் காலத்தில் அடிமையின் சின்னங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டு வந்த ஆங்கில மொழி, அறிவு பெறுவதற்கும், தன சொந்த மேதமையை நிலைநாட்டுவதற்கு, பெரும் பொருளீட்டுவதற்கும் பதவிகள் பெறுவதற்கும் தொழில் செய்வதற்கும் அவசியம் என்ற நிலை ஏற்பட்டு இருக்குறது.  அதன் காரணமாக காஷ் மிரத்தில் இருந்து கைன்யாகுமாரி வரை வாழும் எல்லா மக்களிடமும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற பிறவா ஏற்பட்டிருக்கிறது.
இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தை சேர்ந்த எழுநூறு மொழிகளில் ஒன்று தான் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு சொற்களை அதிகமாக கொண்டது.  லத்தின் எழுத்துக்களால் இடது பக்கத்தில் கருத்து வலது பக்கமாக எழுதப்படுகிறது.
மெட்ரிகுலேஷன், கேந்திரிய பள்ளிக்கூடங்களில், ஆறு வயதில் சேர்கிற மாணவர்கள் இரண்டாவது மொழியாக ஹிந்தி படிக்க ஆரம்பிக்கிறார்கள். அது பலருக்கு தாய்மொழியாக இருக்கிறது. இந்தியர்களுக்கும் அது ஆட்சி மொழி.  தேவநாகரி எழுத்தால் ஹிந்தி எழுதப்படுகிறது.
கங்கை கரையில் புனிதமான வாரணாசி நகரத்தில் பண்டிதர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கிய எழுத்துக்கள்.  எனவே தேவநாகரி என்று பெயர் பெற்றது.  அதன் முகுளம் பிராமி.  2,200 ஆண்டுகளுக்கு முன்னர் அசோகர் கல்வெட்டு எழுத்துக்கள் பிராமி.
சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய வங்காளி, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, மைதிலி, பிஹாரி, ராஜஸ்தானி உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் தேவநாகரி எழுத்துக்களால் எழுதப்படுகின்றன. அது இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகவே எழுதப்படுகிறது.  இந்தியாவின் பழைய மொழியான சமஸ்கிருதம் தேவநாகரி எழுத்துக்களில்தான் எழுதப்படுகிறது.
பெரிய நாடான இந்திய பல மொழிகள், பல எழுத்து முறைகள் கொண்டது.  ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு  வரும் வரையில் அது ஓர் ஆட்சியில் ஆளப்படவில்லை. எனவே ஒரு சமயம், ஒரு மொழி, ஒரு எழுத்து முறை என்பது இல்லை.  திராவிட மொழிகள் நான்கும் தனித்தனியான எழுத்துக்குள் கொண்டு இருந்தன .
தமிழ் மொழி 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாரில் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது.  தமிழின் இலக்கண நுஉலகிய தொல்காப்பிய எழுத்துக்கள் பற்றி ஓர் அதிகாரம் கொண்டு இருக்கிறது.. தமிழ் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக எழுதப்படும் மொழி.  அது ஒளியையே எழுத்தாக எழுதுகிறது.
உலகத்தில் சுமார் எல்லாயிரம் மொழிகள் இருக்கின்றன.  எல்ல மொழிகளும் பேசப்படும் மொழிகளோ, எழுத்துக்கள் கொண்ட மொழிகளோ இல்லை.  பல மொழிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேச்சு மொழியாகவே இருக்கின்றன.  சிறந்த காப்பியங்கள் கதைகள் கொண்டிருக்கின்றன.

ஒரு மொழி எழுதப்படவில்லை என்பதால் அது தாழ்ந்த மொழி என்றோ, வளமற்ற மொழி என்றோ சொல்ல முடியாது என்று மொழி பற்றி ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
பேசும் மொழியும், எழுதும் எழுதும் மனித அறிவின் மேதைமையால் கண்டுபிடிக்கப்பட்டன.  தன் வாழ்க்கைக்கும், சமுருக முன்னேற்றத்திற்கும் பலவிதமான கருவிகளை கண்டுபிடித்த மனிதர்கள், பல ணுக்குற்றாண்டுகளுக்கு பின்னால் கண்டுபிடித்தது தான் மொழி, எழுத்து.  இரண்டும் மகத்தானது என்பதை அறிந்து கொண்டதும், அவை கடவுளின் கொடிய, எல்லாம் இறைவன் மனிதனில் மேம்பாட்டுக்காக வழங்கியது என்று அர்ப்பணித்து விட்டார்கள்.
உலகம் முழுவதிலும் நானுறு மொழிகள், இருப்பது வகையான எழுத்துக்கள் எழுதப்படுகின்றன.  எல்ல எழுத்துக்களும் மனிதர்களின் கண்டுபிடிப்புதான்.  பல எழுத்துக்கள் படிக்க ஆள் இல்லாமல் போய்விட்டன.
ஆனால், எழுத்து இல்லாமல் போகவில்லை,  4000 ஆண்டுகளுக்கு முன்னர் மெசபடோமியாவில் சுமேரியர்கள் அக்கட்டன் மொழியில் , குன்னிபாம் எழுத்துக்களில் களிமண் பலகைகளில் எழுதவற்றை படித்து பொருள் சொல்லி வந்திருக்கின்றனர்.
.....மனிதர்களால் வாய் வழியாக 10,000 ஒலிகளை உருவாக்க முடியும் என்கிறார்கள்.  ஆங்கில மொழியில் 40 ஒலிகள் இருக்கின்றன என்று கண்டறிந்து சொல்கிறார்கள்
...... ஒரு நாடென்றால் ஒரு மொழி பேசும் நாடக, ஒரே எழுத்து முறை கொண்ட நாடாக இருக்க வேண்டும்.  அப்படி இருப்பது தான் பொது நன்மை என்பதற்கு அடிப்படையாக இருக்கும்.  ஆயிரம் மொழிகளின் இருநூரு வகையான எழுத்துக்களையும் கொண்டிருக்கும் நாடு முன்னேற்றம் அடைய முடியாது.
எல்லோரும் கல்வி பெற வேண்டுமானால் - பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிக்கும் எழுத்து எழுத்து முறைக்கும் மாறி வந்து விடுங்கள்.  அதுதான் தேசிய மைய நீரோட்டத்தில் கலந்து முன்னேற்றம் அடைய சரியான வழி என்று ஒற்றை மொழி, ஓரெழுத்து நாட்டை உருக்க பெரும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதான் ஜனநாயக நாடுகளின் பிரச்னை.  பெரும்பான்மையான மக்களிடம் மொழி வெறியை துவண்டு அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரம் பெற காட்சிகள் பாடுபடுகின்றன.  அது இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  பாகிஸ்தானில் நடந்தது.  அதனால் வங்க தேசம் என்று புதிய தேசம் உருவானது.  இலங்கையில் நடைபெற்றது.  பெரும் உள்நாட்டு போர் ஏற்பட்டது.  இந்தப் பிரச்சனையை தீர்க்க ஆங்கிலதோடு பிரெஞ்சு மொழியையும் கனடாவில் ஆட்சி மொழி ஆக்கினார்கள்.
இந்திய மழலையர் ஏன் அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தனித்தனியான எழுத்துக்களை கற்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.  58 மொழிகள் ஆரம்பப் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதாக ஒரு கணக்கு சொல்கிறது.  எல்லாம் வீண்,  ஒரு மொழி, ஓர் எழுத்து மூலம் மனிதன் எல்லாவற்றையும் பெறவும் கொடுக்கவும் முடியும் என்கிறார்கள்.
ஆனால், ஒன்றுபோல் இருக்கும் மனிதன் ஒன்றில்லை,  அவன் சிந்தனை, செயல்பாடு, தத்துவம், வாழ்க்கை முறைகள் என்பன எல்லாம் வித்தியாசத்தில் தான் பூரணத்துவம் அடைகின்றன.  அதன் வெளிப்பாடுதான் பல்வேறு மொழிகள், பல்வேறு எழுத்துக்கள். மனிதன் இல்லாமல் போன பிறகு கூட அவன் மலைகளிலும், கற்களிலும், செப்புத்தகடுகளிலும் கணினிகளில் எழுதிய எழுத்து இருக்கும் .  எழுத்து என்பது கொடுக்களோ, வடிவமோ இல்லை, அவனது ஆத்ம, ஞானம், அறிவு.



No comments:

Post a Comment